கொவிட் 19 தடுப்பூசியை இந்தியாவிற்கு விநியோகிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவாரத்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. ரஷ்யா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை தேவையான நாடுகளுக்கு விற்பனை செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் எரிபொருள் மற்றும் ஆயுதம் தொடர்பான பாரிய கொடுக்கல் வாங்கள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.