fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதியிடம் இருந்து அதிபர்களுக்கு அறிவுறுருத்தல்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 11:28

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு சகல பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அலுவலக அதிகாரிகள் அல்லது ஏனைய உயர் அரச அதிகரிகளின் உத்தரவு என குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துகொள்ளுமாறு அழுத்தம் பிரயோகிக்கும் வன்னம் அதிபர்களுக்கு பலர் கடிதங்களை அனுப்பிவைக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளும் இவ்வாறான கடிதங்களை அனுப்பும் விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் தமது பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது அவ்வாறான எந்த ஒரு கடிதத்தையும் அடிப்படையாக ஏற்க கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய மாத்திரமே மாணவர்களை பாடசாலைகளுக்கு இணைத்துகொள்ள வேண்டும். குறித்த ஒழுங்கு விதிகளை மீறும் அதிபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சகல பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி செயலாளரினால் இது தொடர்பான அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2020 11:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க