fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு பூராகவும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2020 13:14

நாடு பூராகவும் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள்

தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் சமந்தகுமார என்பவரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆறு கிரேம் , 200 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மீகொட மாதுலாவ பகுதியில் வைத்து அவர் கைதாகியுள்ளார்.

கர்ப்பிணி பெண்ணொருவர் முன்னெடுத்த கேரள கஞ்சா வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. பெந்தோட்ட பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பொதிசெய்யப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. வைத்தியரை பார்க்கச்செல்வதாக தெரிவித்து தனது கணவருடன் முற்சக்கர வண்டியில் இப்பெண் கஞ்சா கடத்தில் ஈடுபட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 429 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொட்டாஞ்சேனை பிராந்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது களனிமுல்ல சந்தியில் 75 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவர் புதுக்கடை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

6 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் மீகொட பகுதியிலும் கைதுசெய்யப்பட்டார். மீகொட பொலிசாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2020 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க