fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போரதீவுபற்றில் இம்முறை 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2020 12:03

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை பெரும்போகத்தில் 18 ஆயிரத்து 399 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கான விவசாய மீளாய்வு கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களான, இரா.சாணாக்கியன், கோவிந்தன் கருணாகரம், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

போரத்தீவு பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நவகிரி நீர்ப்பாய்ச்சல் குளத்தின் நீரைக்கொண்டு 17 ஆயிரத்து 729 ஏக்கர் நிலப்பரப்பிலும் தும்பங்கேணி குளத்தின் நீரைக் கொண்டு 670 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் நெற் செய்கையின் போது விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. இப்பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் கடந்த காலத்தில் போரதீவு பற்றில் யானை வேலி அமைக்குமாறு கோரிக்கை விடுத்தபோதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லையென விவசாயிகள் தெரிவித்தனர். வெகுவிரைவில் விவசாயிகளின் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா இதன்போது உறுதியளித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆயிரம் குளங்களை திருத்தும் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ் நீர்ப்பாசன வாய்க்கால்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உரிய காலத்தில் உரமானியம் மற்றும் விதை நெற்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கொக்கட்டிச் சோலை பெரும்போக பயிர்ச்செய்கை குறித்த ஆரம்பகூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொக்கட்டிச் சோலை பிரிவில் 2020 பெரும் போக நெற்செய்கையில் மாகாண நீர்ப்பாசனத்தில் 8 ஆயிரத்து 686 ஏக்கரிலும் தாந்தமலை கமநல பிரிவில் 5 ஆயிரத்து 315 ஏக்கரிலும் கொக்கட்டிச்சோலை கமநல பிரிவிலும் 7136 ஏக்கரிலும் மத்திய நீர்ப்பாசன திட்டத்தில் 350 ஏக்கரிலுமாக 21 ஆயிரத்து 487 ஏக்கரில் பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுமென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அரச அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீர்ப்பாசனம், உரமானியம் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுக்கு அரச அதிபரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2020 12:03

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33