fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொவிட் 19 பரவல் அச்சம் காரணமாக சீனா – மியன்மார் எல்லைப் பகுதியிலுள்ள நகரம் முடக்கம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2020 14:53

கொவிட் 19 தொற்று பரவல் அச்சம் காரணமாக சீனா – மியன்மார் எல்லைப்
பகுதியிலுள்ள நகரம் முடக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு சொந்தமான குறித்த நகரின்
ஊடாக நாட்டிற்குள் மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம்
தெரிவித்துள்ளது.

எல்லையிலுள்ள ருய்லி நகரில் வசிக்கும் மக்கள் அனைவரையும் வைரஸ்
தொற்று பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரிலிருந்து எல்லை வழியாக தமது நாட்டிற்குள் வந்த இருவர் கொவிட் 19
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீன சுகாதார பிரிவு
தெரிவித்துள்ளது. இதனையடுத்தே எல்லையிலுள்ள ருய்லி நகரம் முடக்கப்பட்டுள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2020 14:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க