fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நடுத்தர வர்க்கத்தினரை இலக்கு வைத்து புதிய வீடமைப்பு திட்டம் அறிமுகம்…

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2020 13:15

நாட்டிலுள்ள நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களை இலக்காக கொண்டு புதிய வீட்டுத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் சொந்த வீடு கனவை நனவாக்குவதே இதன் நோக்கமாகும். திட்டத்தினூடாக 5 ஆயிரம் வீடுகள் நடுத்தர வர்க்க மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ளது. 6.25 வீத வருடாந்த நிவாரண வட்டிக்கு வழங்கப்படும் குறித்த வீட்டுக்கென 30 வருட காலம் கட்டணம் செலுத்துவதற்கென வழங்கப்படவுள்ளது. அத்துடன் குறைந்த தொகையொன்றை வழங்கி வீட்டை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பெஹலியகொட, கொட்டவை, பண்ணிப்பிட்டிய மற்றும் மாலம்பே ஆகிய பிரதேசங்களில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் எண்ணிக்கருவுக்கமைய புதிய வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2020 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க