fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2020 13:07

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினரான தினமுல்ல கங்காநம்லாகே நளீன் சத்துரங்க எனும் லடியா, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டிய பணத்தின் ஊடாக கொள்வனவு செய்த இரண்டு அதி சொகுசு பஸ்வண்டிகளும் லேலெண்ட் ரக பஸ்வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துருகிரிய பொலிசாரின் ஊடாக குறித்த பஸ்வண்டிகளுடன் 3 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றிணைந்த குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான அன்னாசி வத்தே அமில என்பவரின் சகா ஒருவர் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மீகொட சம்பத் மாவத்தை பானலுவ பிரதேசத்;திலிரேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மீகொட பொலிஸ் நிலை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. புஞ்சி பொரல்ல பகுதியிலுள்ள அன்னாசிவத்த அமிலவுக்கு அதனை எடுத்துச்செல்வதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் சந்;தேக நபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிசார் முன்னெடுத்துள்ள்னர்.

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட 2 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்ப்ட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாளிக்காவத்த பிரதீபா மாவத்தை பிரதேசத்தில் அவர்கள் கைதுசெய்யப்ப்ட்டுள்ளனர். பெண் சந்தேக நபரிடமிருந்து 60 கிராம் மற்றும் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும்; ஆண் சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் மற்றும் 108 மில்லிகிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் கொலன்னாவ மற்றும் மாளிக்கவத்த பிரதேசத்தைச் சேர்ந்த்வர்கள் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

வெலித்தென்ன ஹேன்பிட்ட பிரதேசத்தில் தந்தையும் மகனும் இணைந்து நீண்டகாலமாக முன்னெடுத்து சென்ற ஹெரோயின் வர்த்தக நடவடிக்கை வெலித்தென்ன பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தன நடவடிக்கையின் பிரதான சந்தேக நபர், கமல் அருணசாந்த எனும் ஆமிகமல் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆயுதகுற்றச்சாட்டு ஒன்றில் இராணுவ சேவையில் தரம் குறைப்பு செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இரண்டு இராணுவ சீருடைகளுடன் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்த்pல் ;நிலுவையிலுள்ளன. சந்தேக நபரின் மகன் சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்கல்ல வலஸ்கல தெமட்டபிட்டிய பிரதேசத்திலேயே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளினால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுதுமாத்யா எனும் பேரில் பிரசித்தி பெற்ற குறித்த நபரின் வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்ப்ட்ட நிலையிலேயே குறித்த் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி, வெல்சன்புர பிரதேசத்தில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்ப்ட்டுள்ளார். பொலிஸ் மோப்ப நாய்களை கொண்டு குறித்த பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 14, 2020 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க