ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூட்டம் நடைபெறும். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சட்ட செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார். கட்சி தலைமைத்துவம் மற்றும் பிரதி தலைமைத்துவம் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை தேசிய பட்டியலுக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர் குறித்தும் நாளைய தினம் செயற்குழு கூட்டத்தின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றும் நோக்கில் இதற்கு முன்னரும் பல தடவைகள் செயற்குழு கூட்டம் இடம்பெற்றது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை எவ்வித தீர்க்கமான முடிவுகளும் எட்டப்படவில்லை.