fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

9 வயது மாணவி சாதாரணதர பரீட்சை எழுத அனுமதி கோரல்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2020 12:47

ஆறாம் தரத்தில் கல்விகற்கும் சிறுமியொருவர் தனக்கு சாதாரணதர பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தன்னால் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலன்னறுவை அரலகன்வில விலயாய வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வெனுலி லெஹென்சா என்ற மாணவியே குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் முதலாம் தரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட போது ஆங்கில மொழியை மிகச்சரளமாக பேசும் திறமையை பெற்றிருந்தார். சிங்கள மொழியில் கல்வி கற்கும் அவரின் ஆங்கில புலமை வியப்பை தருவதாக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். கணிதப்பாடத்திலும் அதி திறமை கொண்டுள்ள மாணவி லெஹென்சா , பல்வேறு போட்டிகளில் இலங்கைக்காக வெற்றிகளை ஈட்டித்தர முடியுமென குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியின் கோரிக்கையை ஏற்று, சாதாரணதர பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்க தயாரென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பாடசாலை அதிபரின் அறிக்கையை பெற்றதன் பின்னர், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2020 12:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க