fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எல்லைப்பிரச்சினையை தீர்க்க இந்தியாவும் சீனாவும் இணக்கம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2020 12:38

எல்லைப்பிரச்சினையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் இணக்கம் வெளியிட்டுள்ளன. 5 விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட இணக்கப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எல்லைப்பிரச்சினை தொடர்பில் சீன அதிகாரிகளுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். குறித்த பேச்சுவார்த்தையின்போதே முக்கிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய – சீன எல்லைப்பகுதியில் அண்மைக்காலமாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. எல்லையிலுள்ள படைவீரர்களுக்க்pடையில் சில சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சமரும் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இந்தியாவும், சீனாவும் எல்லைப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டுமென சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2020 12:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க