fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முறையற்ற வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நவாஸ் ஷெரீப் குற்றவாளியாக்கப்பட்டார்…

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2020 17:26

முறையற்ற வாகன கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து அன்பளிப்பாக கிடைத்த அதி சொகுசு ரக வாகனங்களை முறையற்ற கொடுக்கல் வாங்கல் ஊடாக கொள்வனவு செய்தமையின் காரணமாக அவருக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இம்முறையற்ற கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிகளுள் ஒருவரான ஆசீப் அலி சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர்களில் ஒருவரான யூசுப் ராசா கிளானி ஆகியோருக்கு எதிராகவும் வழக்கொன்று விசாரிக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இம்மோசடி வாகன கொடுக்கல் வாங்கல் காரணமாக அந்நாட்டு திரைசேரிக்கு பாரிய நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் லண்டன் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2020 17:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க