2021ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டமைக்காகவே அவர் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயரை, நோர்வே பாராளுமன்ற உறுப்பிர் கிறிஸ்டியன் டைப்ரிங் கியட் பரிந்துரை செய்துள்ளார். ஏனைய சமாதான நோபல் பரசு வேட்பாளர்களை விட ஜனாதிபதி டிரம்ப் இரு நாடுகளுக்கிடையில் சமாதானத்தை உருவாக்க கடும் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், அது பாராட்டுக்குரியது எனவும் கிறிஸ்டியன் டைப்ரிங் கியட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையிலான மத்திய கிழக்கு ஒப்பந்தத்தில் எதிர்வரும் 15ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்;திடுவாரென வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.