fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தர வரிசையில் முதலிடம் பெற இங்கிலாந்து அவுஸ்திரேலியா இன்று மோதல்..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 17:36

இங்கிலாந்து அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ருவண்டி 20 போட்டி இன்று சவுத்ஹெம்டனில் நடைபெறவுள்ளது. முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2 – 0 என கைப்பற்றியது. எவ்வாறெனினும் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமையவுள்ளது.

ஐசிசி ருவண்டி 20 அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் தலா 273 புள்ளிகளை பெற்று முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன. இன்றைய தினம் வெற்றி பெறுகின்ற அணி தரவரிசையில் முதல் இடம் பிடிக்கும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைகிறது. ஆரோன் பிரின்ச் தலைமையில் அவுஸ்திரேலியா அணியும். மொய்ன் அலி தலைமையில் இங்கிலாந்து அணியும் கலமிறங்கவுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 17:36

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க