fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு கபூர் கட்டிடத்தை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 17:12

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடத்தை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கொழும்பு நகரை அழகுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் பழைய கட்டிடங்களை புனரமைக்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கபூர் கட்டிடமும் புனரமைக்கப்படுகின்றத. 6 மாடிகளை கொண்ட கபூர் கட்டிடம் கடந்த நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 105 ஆண்டுகளுக்குமுன்னர் 1915 ஆம் ஆண்டு பிரபல மாணிக்ககல் ஆபரண வர்த்தகரான நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் என்வரால் திறந்து வைக்கப்பட்டது. அப்துல் கபூர் எம்.டி.எச். அப்துல் கபூர் கம்பனியை 1894 ஆம் ஆண்டு ஏற்படுத்தியுள்ளார். பிரிஸ்டில் ஹோட்டலில் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. மாணிக்க கல் , முத்து மற்றும் ஆபரண ஏற்றுமதி உள்ளிட்ட பவள ஏற்றுமதி வர்த்தகத்திலும் ஈடுபட்ட அப்துல் கபூர் அவர்கள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படும் கப்பல்களுக்கு சென்று மாணிக்க கல் மற்றும் ஆபரணங்களுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்ட ஒரு சில வர்த்தகர்களுள் ஒருவராவார்.

அவரது பவளம், முத்து, மாணிக்கம் உள்ளிட்ட பல ஆபரணங்கள் இளவரசர் வேல்ஸ் மற்றும் இளவரசியினாலும் பரீசிலிக்கப்பட்டவைகளாகும். அப்துல் கபூர் உலகம் முழுவதிலும் முன்னணி மாணிக்க கல் ஆபரண கண்காட்சிகளில் தமது உற்பத்திகளை காட்சிக்கு வைத்ததுடன் 1904 ஆம் ஆண்டு சென் லூவி உலக வர்த்தககண்காட்சியிலும் 1924 ஆம் ஆண்டு பிரிட்டிஸ் கண்காட்சியிலும் மாணிக்க கல் மற்றும் ஆபரணங்களை காட்சிப்படுத்தியுள்ளார். கபூர் கட்டிடம் ஆபரண வர்த்தக துறைக்கு மாத்திரமன்றி இலங்கையில் முன்னணி வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இடமளிக்கப்பட்ட ஒரு கட்டிடமாகும்.

2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி கபூர் கட்டிடம் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய சொத்தாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகமும் கபூர்கட்டிடத்திலேயே அமைந்திருந்தது. கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக்க கொடஹே வா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புராதன கட்டிடங்களை புனரமைப்பதன் ஊடாக எதிர்கால சந்ததியினருக்கு இந்த பாரம்பரிய சொத்துக்கள் குறித்து அறிந்து கொள்வதற்கு மட்டுமன்றி பொதுமக்களும் பல்வேறு நலன்கள் கிட்டுமென கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 17:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க