வெலிப்பே சுராஜ் எனும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.
மகிலன் கமுவே சஞ்சீவ எனும் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவரின் உதவியாளரான வெலிப்பே சுராஜ் என்பவர் மினுவாங்கொடையில் கைதுசெய்யப்பட்டார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் ரைபல் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.