fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

10 கிலோ தங்கத்துடன் சந்தேகநபர் ஒருவர் கற்பிட்டியில் கைது..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 12:15

கற்பிட்டி பாலாவி பகுதியில் 10 கிலோ கிராம் தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

கற்பிட்டி பாலாவி வீதியின் பாலந்துடாவ சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி தங்கத்துடன் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

மோட்டார் காரில் மிக நுணுக்கமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் வெளிநாடொன்றுக்கு எடுத்துச் செல்வதற்காக சந்தேக நபர் முயற்சி செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 8 பொதிகளில் இவை பொதியிடப்பட்டிருந்தன.

சந்தேக நபர் புத்தளம் கந்தக்குடி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 34 வயதுடைய நபர் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க