fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சொக்காமல்லி குறித்த நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு…

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 12:10

சொக்காமல்லி குறித்த நீதிமன்ற தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு…

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய இன்று பாராளுமன்றத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கிறது. இதற்கமைய பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற இன்றைய கூட்ட அமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

2015 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்த நகரில் அலங்கார வேலைப்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் ப்ரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடந்த பொதுத் தேர்தலில் ஒரு இலட்சத்து 4ஆயிரத்து 237 விருப்பு வாக்குகளை பெற்று இரத்தினபுரி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இரணடாம் இடத்திற்கு தெரிவனார். எனினும் பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளமன்ற உறுப்பினராக செயற்பட தகுதியில்லையென சட்டமா அதிபர் நீதி அமைச்சுக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவித்தார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு அறிவிக்கப்பட்டது. பிரேமலால் ஜயசேகரவுக்கு மரண தண்டனை விதியாக்கப்பட்டிருந்த நிலையில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றயீட்டியதன் பின்னர் தேர்தல் ஆணைக்குழு அவரை பாராளுமன்ற உறுப்பினராக குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் உரிமைகள் மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைகளை பாதுகாப்பது தமது பொறுப்பு என்பதால் தான் அதற்காக முன்னிற்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனக்கு பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளச் செய்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ரீட் மனுவொன்றை தாக்கல் செய்தார். பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளச் செய்வதற்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்து தலைமை நீதிபதி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பிரேமலால் ஜயசேகர தேர்ந்தெடுக்கப்பட்டமை சட்டவிரோதமானதென இதுவரை நீதிமன்ற தீர்ப்பொன்று வெளியாகவில்லை என தெரிவித்தார். இதன் அடிப்படையில் மனுதாரருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கவேண்டிய சகல சலுகைகளையும் அனுபவிப்பதற்கு சட்டரீதியான தடையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு சட்டரீதியான தடை இருப்பதாக கருதமுடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடவுள்ள பாராளுமன்ற அமர்வில் ப்ரேமலால் ஜயசேகர கலந்துகொள்ளவுள்ளார்.

சபாநாயாகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று கூடவுள்ள பாராளுமன்ற கூட்டத்தில் சபை ஒத்திவைப்பு விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை நிதி அமைச்சின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் ஆண்டின் நடுப்பகுதியிலான அரச நிதி நிலமை தொடர்பான விவாதங்கள் இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2020 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க