fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் ஒரு சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2020 11:46

நாட்டின் ஒரு சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நியாகம ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, அகலவத்த, வளல்லாவிட்ட, இங்கிரிய மற்றும் ஹொரண ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, அரணாநாயக்க, கலிகமுவ ஆகிய பிரதேச செயலக பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எலப்பாத்த, இரத்தினபுரி, கிரியெல்ல, அயகம ஆகிய பிரதேச செயலகபிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் முதலாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் தமது சூழல் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக கொழும்பு மாவட்டத்தில் சீத்தாவக்க பிரதேச செயலக பிரிவுக்கும் காலி மாவட்டத்தின் நெலுவ பிரதெச செயலகப்பிரிவிற்கும் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, கேகால்ல, யட்டியாந்தோட்ட, புலத்கோப்பிட்டிய மற்றும் தெய்யோவிட்ட ஆகிய பிரதேசலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் ஊடாக பொதுமக்களுக்கு தெரிவிப்பது யாதெனில் பெறுமதிவாய்ந்த தமது பொருட்களை பையொன்றில் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் தேவை ஏற்பட்டால், நிலவக்கூடிய அதிக மழைவீழ்ச்சியை அடுத்து பாதுகாப்பான இடமொன்றுக்கு செல்ல தயாராகவிருக்குமாறு அறிவிக்கப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக மாத்தளை, மாத்தறை, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமையால் அங்குள்ள மக்கள் தமது வீடுகளை சூழவுள்ள மலைப்பாங்கான பகுதிகள் மண்மேடுகள் குறித்து அவதானமாக இருக்குமாறும். வீதிகளை பயன்படுத்தும் போது அவதானமாக செயற்படுமாறும் தேவை ஏற்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2020 11:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க