fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கண்டி திகன பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வுக்கான காரணம் வெளியாகியுள்ளது..

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2020 12:55

அண்மையில் கண்டி திகன பகுதியில் கிராமங்களில் உணரப்பட்ட நில அதிர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. நிலத்துக்கடியில் சுண்ணாம்பு கற்களுக்கிடையிலான உராய்வே அதிர்வுக்கு காரணமென தெரியவந்துள்ளது. அதற்கமைய தயாரிக்கப்பட்ட ஆய்வரிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஊடகங்களுக்கும், உரிய பிரிவினருக்கும் அனுப்பிவைக்கப்படுமென பூகோள மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

நில அதிர்வு தொடர்பில் மூன்று கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய குறித்த அதிர்வு நில நடுக்கம் அல்லவென உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் சர்வதேச ரீதியில் அடிக்கடி இடம்பெறுகின்றன.

இந்நிலையில் நில அதிர்வு பதிவான கிராம மக்கள் எதிர்வரும் காலங்களிலும் குறித்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் இருப்பது முக்கியமாகும். கட்டிட நிர்மானங்களின் போது பூகோள மற்றும் சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வது சிறந்ததென அதன் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2020 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க