ஏற்றுமதி வருமானத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் காணப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளத. இதன் ஊடாக பெருந்தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு நிவாரணம் மற்றும் கடன் வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சில வருடங்களில் இலங்கையில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கை பொருளாதாரத்தின் மூலம் கூடுதல் நன்மைகள் கிடைக்கப்பெரும் இதற்கான திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தையும் இரு மட ங்காக அதிகரிப்பதற்கான ஐந்து வருட கால திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெங்கு, இறப்பர் போன்றவற்றின் விளைச்சல்களை அதிகரிப்பதற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விவசாயிகளுக்கு கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை குறித்த துறையில் காணப்படும் குறுதிய மற்றும் நீண்டகால பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு உடனடி தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் ரமேஸ் பத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.