சிறுவர்களை மோசமாக துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு… நாடளாவிய ரீதியில் விசாரணைகள்..
Related Articles
சிறுவர்கள் மோசமான முறையில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பதிவாகும் துஸ்பிரயோகங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், குரூரமான இடம்பெறும் துஸ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார். அதற்கமைய நாடளாவிய ரீதியில் விசாரணைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் அதிகார சபைக்கு 8 ஆயிரத்து 558 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. எனினும் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 4 ஆயிரத்து 471 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அரசாங்கம் அனைத்து அமைச்சுக்களினூடாகவும், சிறுவர் துஸ்பிரயோகங்களை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை மிகவும் குரூரமான முறையில் சிறுவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. அவ்வாறான சம்பவங்;கள் பதிவாகும்போது சந்தேக நபர்கள் உடனடியாக கைதுசெய்யப்படுவார்கள். பெற்றோர்கள், முதியவர்கள் உட்பட முழு சமூகத்திற்கும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு அதிகார சபையும் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் சிறுவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகஅதிகார சபையின் தலைவர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.