fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அபே ஜனபல கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 19:02

அபே ஜனபல கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் தொடர்பான பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையிலுள்ளது. இந்நிலையில் கட்சியின் நட்பெயருக்கு ஏற்பட்ட கழங்கம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சமன்பெரேரா தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசியப் பட்டியல் உறுப்பினரை அபகரிப்பதற்காக அத்துரெலி ரத்ன தேரர் , நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு முக்கியஸ்த்தர்களை சந்திக்க சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். எங்களது கட்சியின் தற்போதய செயலாளர் , அத்துரெலிய ரத்ன தேரரை தொடர்பு கொண்டு இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றை பெறுமாறு குறிப்பிட்டார். பாரளுமன்றத்தில் 67 ஆயிரத்து 758 வாக்காளர்களுக்காக குரல் எழுப்ப வேண்டியுள்ளது. அதற்கான ஆசனம் வெற்று ஆசனமாகவே உள்ளது. இந்த நெருக்கடி நிலையினால் கட்சியின் நற்பெயருக்கு கழங்கம் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக சட்டரீதியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாம் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றை இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளோம். அதன் ஊடாக நியாயம் கிடைக்குமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம். கட்சி என்ற அடிப்படையில் மத்திய செயற்குழு ஞானசார தேரரை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் தீர்மானத்திலேயே உள்ளது.”

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 19:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க