fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழில் கையடக்கதொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 17:17

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாசியப்பிட்டி பகுதியில் கையடக்கதொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இதுதொடர்பான சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளனர். வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த 8 கையடக்கதொலைபேசிகளே சந்தேகநபர்களால் திருடப்பட்டுள்ளன.

வீட்டில் குடியிர்ந்தவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2020 17:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க