பாடசாலை மாணவர்களின் புத்தக பையின் சுமையை குறைப்பது தொடர்பில் விசேட கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த்
தெரிவித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக குறித்த வேலைத்திட்டத்தை
முன்னெடுக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கியத்தின் கொள்கை பிரகடணத்தில்
கல்வித்துறையை மறுசீரமைப்பது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமையஒரு வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களுக்கு பதிலாக பாடசாலை தவணை கல்வி அடிப்படையில் பாட புத்தகங்களை அச்சிடுவது தொடர்பில் யோசனை
முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைப்பது
தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிர்மாண திறன் மிக்க
ஒழுக்க விழுமியம் மிக்கரூபவ் சமூகத்தில் பணியாற்றக்கூடிய பரம்பரை ஒன்றை
உருவாக்குவதை நோக்காக கொண்டு கல்வி மறுசீரமைப்புதொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.