முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வருகைதந்தார்.
பொருளாதார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தற்போதய தலைவருமான நிஹால் ஜயத்திலக்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக விக்கிரமசிங்கவுக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் அமுல்படுத்தப்பட்ட தேசிய நிறைவேற்று சபையின் தீர்மானங்கள் காரணமாக தான் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டதாக நிஹால் ஜயத்திலக்க முறைப்பாடு செய்திருந்தார். விக்கிரமசிங்க இம்முறைப்பாட்டிற்காக வாக்குமூலம் வழங்குவதற்காகவே வருகைதந்தார்.
ஆணைக்குழுவின் ஆரம்பத்தில் முன்னாள் பிரதமரிடம் ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி உபாலி அபேரட்ன தேசிய நிறைவேற்று சபையானது சட்ட வரையறைகளின் கீழ் வகுக்கப்பட்டதொன்றா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க எவ்வித சட்டவரையறைகளையும் அடிப்படையாக கொண்டு ஸ்த்தாபிக்கப்பட்ட நிறுவனம் அல்ல எனவும் அரசியல் பின்னணியின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தை சிறந்த செயற்திறனுடன் அமுல்படுத்துவதற்காக இந்நிறுவனம் ஸ்த்தாபிக்கப்பட்டதொன்று என தெரிவித்தார். இதுகுறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் பலரிடம் ஆணைக்குழு சாட்சிகளை பதிவு செய்துள்ளது.