போதைப்பொருள் பெண் வர்த்தகர் எனக் கூறப்படுகின்ற நிலுஸா தில்ருக்சி எனும் மட்டக்குளி அக்கா என்ற பெண்ணின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புபட்ட 5 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேல் மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 381 போதைப்பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு 386 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
வத்தளை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள போதைப்பொருளுக்கு அடிமைப்பட்ட ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமையவே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மட்டக்குளி அக்கா எனும் பெண் சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் உள்ளார். அவரது போதைப்பொருள் வர்த்தக வலையமைப்புடன் தொடர்புபட்ட 5 சந்தேக நபர்கள் விற்பனைக்கென பொதியிடப்பட்டிருந்த 10.97 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டனர்.
600 கிராம் கேரள கஞ்சா, போதைப்பொருள் வர்த்தகத்திற்கென பயன்படுத்தப்பட்ட 4 தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிளொன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் வத்தளை மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்ப்படவுள்ளனர்.