அரசியல் யாப்பின் உத்தேசித்த புதிய 20 வது மறுசீரமைப்பின் சட்ட வரைவு நீதி அமைச்சின் செயலாளரினால் சட்டமா அதிபரின் கவனத்திற்கென நேற்று அனுப்பிவைக்கப்பட்டது. இதேவேளை 19வது அரசியல் யாப்பின் மறுசீரமைப்புக்களில் உள்ள சிறந்த விடயங்களுடன் 20 வது மறுசீரமைப்பை அமைச்சரவைக்கு இன்று சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று தெரிவித்திருந்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின்போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இது குறித்து கருத்து தெரிவித்தார்.
“19வது அரசியல் யாப்பை உடனடியாக நீக்கவேண்டுமென நாம் தெளிவாக கூறினோம். ஏன் என்றால் 19 வது சீர்திருத்ததின் மூலம் நாடு பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்த தருணங்கள் உண்டு. அத்துடன் முழு அரசியல் யாப்பினது மறுசீரமைப்பு குறித்தும் நாம் கலந்தாலோசித்தோம். 19 வது சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதற்கென குழுவொன்றும் நியமிக்கப்ப்ட்டது. குழு அறிக்கை அமைச்சரவைக்கு கிடைத்தவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்த்pற்கு அனுப்பிவைக்கப்பட்டு சட்ட வரைவுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிகார பகிர்வை விட வளங்களை பன்முகப்படுத்தவே நாம் எதிர்பார்த்துள்ளோம். குறித்த பகுதிகளுக்கு தேவையான வளங்கள் மற்றும் பொருளாதார புத்தெழுச்சிக்கா எடுக்க்ப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.”