இங்கிலாந்து – பாகிஸ்தான் இரண்டாவது 20 – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில்…
Related Articles
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்அணிகளுக்கிடையிலான இரண்டாவது டுவண்டி – 20 போட்டி இன்று மென்ச்செஸ்டரில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணிக்கு இயன் மோர்கனும், பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையில் 3 போட்டிகளை கொண்ட டுவண்டி – 20 தொடர் இடம்பெற்று வருகிறது. நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது டுவண்டி – 20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. குறித்த போட்டியும் மென்ச்செஸ்டரிலேயே இடம்பெற்றது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கும் மழையால் பாதிப்பு ஏற்படலாமென இங்கிலாந்து கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. ஏனைய இரு போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.