fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிற்போடப்பட்ட றைகம் தொலைகாட்சி விருது விழா அடுத்த மாதம் 19ம் திகதி..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2020 19:22

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்ட றைகம் தொலைகாட்சி விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ளது. தொலைகாட்சி தொழிற் துறையில் ஈடுபட்டுள்ள திறமையானவர்களை கௌரவிக்கும் வகையிலேயே குறித்த விருது வழங்கப்படுகின்றது.

இம்முறை விருதுக்காக பரிந்துரைகக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் கடந்த பெப்ரவரி 28ம் திகதி அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா நிலை காரணமாக விருது வழங்கும் விழா பிற்போடப்பட்டதாக றைகம் குழுமம் அறிவித்தது. இம்முறை 16வது தடவையாக றைகம் விருது வழங்கும் விழா இடம்பெறவுள்ளது. சுதந்திரமாக 16வது முறையாக என பெயரிடப்பட்டு விருது வழங்கும் விழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 21ம் திகதி தாமரை தடாக கலையரங்கில் இடம்பெறவிருந்த விருது வழங்கும் விழாவுக்காக வழங்கப்பட்ட அழைப்பிதல்கள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ள விருது விழாவுக்கு செல்லுப்படியாகாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எங்களுக்கு சுதந்திரமாக எந்தவொரு நபரின் அழுத்தங்களும் இன்றி விருது வழங்கும் நிகழ்வை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தமை, ஒரு தேசிய நிறுவனம் என்ற வகையில் எமக்கு உண்மையாகவே கௌரவமாக உள்ளது. 16 வருடங்களில் நாங்கள் தொலைகாட்சியுடன் தொடர்புப்பட்ட சுமார் 1200 பேருக்கு விருதுகளை வழங்கியுள்ளோம். திறமையானவர்களை கௌரவப்படுத்துவதே எமது நோக்கம். அதன் ஊடாக அவர்கள் நல்ல படைப்புக்களை வெளிகொனரும் அதேவேளை அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும் இரண்டாம் நிலையில் உள்ளவர்கள் தமக்கும் எதிர்காலத்தில் இவ்வாறான விருது கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் நல்ல படைப்புக்களை கொண்டுவர வேண்டும் என்பதே இவ்வாறான விருது வழங்கும் நிகழ்வினால் வழங்கப்படும் உத்வேகமாகும். அதுவொரு பக்கத்தில் சேவையாகும். விசேடமாக றைகம் எனும் நிறுவனம் பெயரளவில் மாத்திரமல்ல, உண்மையாகவே தேசிய நிறுவனம்.

 

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2020 19:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க