fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

IPL தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2020 16:01

ஐபில் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் 19ம் திகதி ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் துபாயில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியின் இடதுகை வேகபந்து வீச்சாளர் டேனியல் ஷேம்ஸ் டெல்லி அணிக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக வேக பந்துவீச்சாளர் டேனியல் ஷேம்ஸ் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடரை கண்காணித்து வந்த நிலையில், இம்முறை தொடரில் விளையாடவுள்ளமை தனக்கு கிடைத்த அதிஷ்டமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 29, 2020 16:01

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க