ஹொலிவூடின் பிரபல நடிகை ச்செட்விக் பொஸ்மன் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். 43 வயதான அவர் நீண்ட காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது நோய் தொடர்பில் இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லையென அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மார்வெல் ஸ்டூடியோவின் இயக்கத்தில் வெளியான சாகச திரைப்படங்களான எவன்ஜஸ் திரைப்படங்களில் ப்லக் பான்தர் என்ற காதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். ஒஸ்கார் விருதுக்கென சிறந்த திரைப்படமாக தெரிவான முதல் சாகச திரைப்படமாகவும் ப்லக் பான்தர் அமைந்திருந்தது. 2013ம் ஆண்டு ஹொலிவூடில் அறிமுகமான இவர் 42 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ச்செட்விக் பொஸ்மனின் உயிரிழப்பு தொடர்பில் அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.