fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாராளுமன்ற உணவின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரைக்கார் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2020 19:55

பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரைக்கார் இன்றைய தினமும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் திருப்தியடைய முடியாதென அவர் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார். அது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கருத்து வெளியிட்டார்.

“நான் நேற்றையதினம் முன்வைத்த விடயம், உணவுப் பானங்களின் தரம் தொடர்பில், இங்குள்ள 225 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் ஒவ்வொரு நாளும் உண்பதில்லை. பாராளுமன்ற ஊழியர்கள், சாரதிகள் என 2000 ஆயிரம் பேர் வரை உண்கின்றனர். கணக்காய்வு தினத்தினால், வழங்கப்பட்ட தொகை 2 ஆயிரம் பேரையும் 225 பேரையும் சேர்த்தா என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். அப்படியிருந்தால், அது எங்களுக்கு ஏற்படுத்தி அகௌரவமாகும். இங்கு ஹில்டன், சங்கிரில்லா உள்ளிட்ட ஹோட்டல்களில் உள்ள உணவு வகைகள் இல்லை. சோறும், மரக்கறியும் தான் இருக்கின்றது. பழவகைககள் மலிவாக இருக்கும் காலப்பகுதியிலும் பழ வகைகள் கொண்டுவரப்படுவதில்லை. எல்லா நாட்களிலும் பப்பாசி , அன்னாசி மற்றும் வாழைப்பழம் மாத்திரமே உள்ளது”

சபாநாயகர் கருத்து தெரிவிக்கையில் ;

அனைவரதும் உணவு செலவீனங்களை 225 ஆல் வகுத்தே, இந்த தொகை கூறப்பட்டுள்ளது. பின்னர் நான் தொடர்பில் ஆராய்ந்த போது உறுப்பினர் ஒருவரின் ஒரு வேளை சாப்பிட்டுக்கு 296 ரூபா மாத்திரமே செலவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டது. நாங்கள் சரியாக அதுதொடர்பில் ஆராய்ந்து உரிய தொகையை சபையில் அறிவிப்போம்.”

 

 

 

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 28, 2020 19:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க