பாராளுமன்றத்திற்கு செல்வதா இல்லையா என்பது தொடர்பில் தான் இதுவரை தீர்மானிக்கவில்லையென பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு பாராளுமன்றத்திற்கு செல்வது அவசியமில்லையென பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகள் சில வற்றுக்கும் அவர் பதிலளித்தார்.
கேள்வி : அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. உங்களது நிலைப்பாடு என்ன?
பதில் : எங்களுக்கு 113 உறுப்பினர்கள் இருந்தால் போதுமானதே எனினும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியது அரசியமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக அல்லது, புதிய அரசியல் அமைப்பொன்றை கொண்டுவருவதற்காகவே, அதுதொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்போம்.
கேள்வி : இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில் : பாராளுமன்றத்தை விட வெளியிருப்பது. நல்லது. தேவை ஏற்பட்டால், வரமுடியும். அதைவிட நான் வெளியில் இருப்பதே கூடுதலாக விரும்புகிறேன்.
கேள்வி :ராஜித்த சேனாரத்ன அரசியல் அமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாதென குறிப்பிட்டுள்ளார்.
பதில் : அவர்கள் பல்வேறு விடயங்களை குறிப்பிட்டார்கள், அவற்றில் ஒன்றையேனும் மக்கள் செய்யவில்லை. இது மக்களின் தீர்ப்பு
[ot-video type=”youtube” url=”https://youtu.be/W6u2hGA7oAo”]