வைத்தியர் ஷாபி சஹாப்தீன் தொடர்பில் குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவிற்கமைய இரண்டு நாட்களே ஆனா குழந்தையின் சடலம் இன்று மீள தோண்டியடுக்கப்பட்டுள்ளது.
சிசேரியன் சத்திர சிகிச்சையின் ஊடாக பிறந்த தமது குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் காணப்படுவதாக ரிக்கில்ல கஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதான நீதவான் சம்பத் ஹேவாவசம் நேற்று முன்தினம் அது தொடர்பான உத்தரவை பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் நீதவான் முன்னிலையில் சிசுவின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.