அமெரிக்காவின் லாரா புயலின் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்ககை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மற்றும் டெக்ஷாஸ் மாநிலங்களில் புயல் தாக்கத்தினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. லூசியானா மாநிலத்தில் மணித்தியாலத்திற்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியுள்ளது.
160 வருடங்களின் பின் இத்தகைய பாரிய புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் புயல் தாக்கம் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். ஒரு சில இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.