மீன் இறக்குமதிக்கு வருடாந்தம் செலவிடும் வெளிநாட்டு செலாவணியைக் குறைப்பதற்கான சந்தர்ப்பங்களை பல கோணங்களில் திட்டமிட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள் மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடி துறைமுக அபிவிருத்தி ஆழ்கடல் மீpன்பிடி நடவடிக்கை மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் பொருளாதார புத்தெழுச்சி குறித்த ஜனாதிபதி செயலணியின் பெசில் ராஜபக்ஸ , ராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜயசேகர, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர, அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் அதிகாரிகள் உட்பட கடற்றொழில் துறைசார்;ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களும் இணைந்திருந்தனர்.
மீன் , கருவாடு, மாசி, டின்மீன் என்பனவற்றின் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் வருடாந்தம் செலவிடுகின்றது. மீன்பிடித்துறையானது மொத்த தேசிய உற்பத்திக்கு இதுவரை 1 சதவீத பங்களிப்பையே வழங்கியுள்ளது. நாட்டை சூளவுள்ள கடற்பரப்பிலிருந்தும் நாட்டில் காணப்படுகின்ற வாவித் தொகுதிகள் மூலமும் உரிய பயன்களைப் பெற்று வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ள கூடிய ஏற்றுமதிதுறையில் மீனவ கைத்தொழிலையும் உள்ளடக்க வேண்;டுமென ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். அலங்கார மீன் ஏற்றுமதியின் போது 95 சதவீத நன்னீர் மீன்களும் 98 சதவீத கடல்மீன்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுமார் 700 வகையான அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக அத்துறையில் ஈடுபடுபவர்கள் இங்கு சுட்டிக்காட்டினர். எமக்கு தனித்துவம் பெற்ற நன்னீர் மீன் இனத்தை பெருக்கி ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதலான வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. உலகில் அதிகூடிய கேள்வியுடைய நீர் வாழ் உயிரினங்களை இறக்குமதி செய்து உற்பத்திசாலைகளின் அதனை வளர்த்து மீண்டும் ஏற்றுமதி செய்வதில் காணப்படுகின்ற தடைகளை தளர்த்துவதற்கான இடவசதிகளை கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நாட்டிற்குள் 18 ஆயிரம் குளங்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றில் சுமார் ஆயிரத்து 500 குளங்களே நன்னீர் மீன்பிடிக்கென பயன்படுத்தப்படுகின்றன. ந
ன்னீர் மீன்களை பெருக்கக்கூடிய குளங்களை இனங்கண்டு கிராமிய தேவைகளை நிவர்த்திசெய்ய முடியுமென பொருளாதார புத்தெழுச்சி குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஸ இதன்;போது தெரிவித்தார். நன்;னீர் மீன்பிடித்துறையை ஊக்குவிப்பதற்காக சுமார் 90 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடுவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பயன்பாட்டிலுள்ள அதி குளரூட்டிகள்; கடந்த அரசாங்கத்தில் 33 ஆண்டுகள் போன்ற நீண்ட காலத்திற்கு தனியார் வர்த்தகர்களுக்கு குத்தகைக்கு விடுப்பட்டுள்ளதனால் இது கடற்றொழில் கைத்தொழிலை வீழ்ச்சியடையச் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதொன்று என மீளவர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.
கடல் எல்லையில் மீன்பிடியை ஊக்கப்படுத்துவதற்காக இனங்காணப்பட்டுள்ள 172 இடங்களில் செயற்கை இனவிருத்;தி மத்திய நிலையங்களை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படாதுள்ள புகையிரத பெட்டிகள் பஸ்வண்டிகள் மற்றும் மீன்பிடி வள்ளங்கள் என்பனவற்றை சமுத்திரத்திற்குள் வைப்பதற்கும் இப்;பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டது. டின் மீன் உற்பத்திக்கு தேவையான மீன்களை உள்ளுரிலேயே பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி கடற்றொழில் மற்றும் மீன்பிடி கைத்தொழிலுக்கு தேவையான கப்பல்களை உள்நாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் தயாரிக்க முடியுமெனவும் வலியுறுத்தினார்.