இடைகால கணக்கறிக்கை பிரதமரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Related Articles
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான அரச செலவீனங்களை மேற்கொள்வதற்கான இடைகால கணக்கறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்பிக்கப்பட்டது. பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இவ்விடயம் உள்ளடக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கணக்கறிக்கைக்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைவாகவே பிரதமர் நிதி அமைச்சர் என்ற ரீதியில் இன்றைய தினம் குறித்த இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பித்தார். இது தொடர்பில் இன்றும் நாளையும் வாத பிரதிவாதங்கள் இடம்பெறவுள்ளன.
இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றில் சமர்பித்து பிரதமர் உரை நிகழ்த்தினார். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல் கடந்த பெப்ரவரி மாதத்தில் கடன்களை செலுத்துவதற்கு நான் பாராளுமன்றத்தில் கோரியிருந்தேன் எனினும் அன்று எதிர்க்கட்சி அதற்கு இடையூறு விளைவித்தால் அதனை மேற்கொள்ள முடியாது போனது. அந்த பின்னணியிலேயே இன்று தான் 2020ம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டர். அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையான நான்கு மாதங்களுக்கு அரச செலவீனங்களுக்காக ஆயிரத்து 900 ஆயிரம் பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் அதற்காக ஆயிரத்து 300 பில்லியன் கடன் எல்லையை அங்கீகரிப்பதற்கே இந்த குறைநிரப்பு பிரேரணை சமர்பிக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சகல குறைநிரப்பு பிரேரணையும் 2020 ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் நாங்கள் எதிர்காலத்தில் சமர்பிப்போம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
2019ம் ஆண்டு செலுத்தப்படாத பட்டியளை செலுத்துவதற்கு பெருமளவு பணம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் அதிக பொருளாதார வளர்ச்சியையடைந்து வரவு செலவு திட்ட துண்டு விழும் தொகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலீட்டு மேம்பாட்டை செய்வதன் அடிப்படையிலேயே நாம் நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்தின் செலவுகளை குறைத்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியுமென்ற நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடைக்கால கணக்கறிக்கையை சமர்பித்து ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்தார்