சீருடை வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிப்பு
Related Articles
நாட்டின் சகல பாடசாலைகளிலும் கல்வி கற்கும் முதலாம் தர மாணவர்களுக்கு 2020ம் ஆண்டுக்கென வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை வவுச்சர் செல்லுப்படியாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 31ம் திகதியுடன் அதன் கால எல்லை நிறைடையவிருந்தது. எனினும் கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து பாடசாலை சீருடைக்கான வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.