திட்டமிட்ட குற்றச்செயல்களை புரியும் கும்பல்களை அடக்குவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது..
Related Articles
பாரியளவில் நாட்டில் இருந்துவந்த திட்டமிட்ட குற்றச்செயல்களை புரியும் கும்பல்களை அடக்குவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் இடர் முகாமைத்து ராஜாங்க அமைச்சின் செயலாளராகவும் கடமைகளை பொறுப்பு பேற்றுக்கொண்ட போது கமல் குணரட்ன இதனை தெரிவித்தார்.
நாரஹன்பிட்டியவிலுள்ள கொழும்பு மாவட்ட செயலக வளவில் கமல் குணரட்ன கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். அமைச்சர் சமல் ராஜபக்ஸ இராணுவத்தளபதி லெப்டினன் சரேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார்மாசல் சுமங்கல டயஸ், பதில் பொலிஸ் அதிபர் சி.டி விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். நாட்டில் அனர்த்த நிலையின் போது ஏற்படவேண்டிய விதம் தொடர்பாகவும் கமல் குணரட்ன கருத்து வெளியிட்டார்.