கிரிக்கட் அணியின் வேக பந்துவீச்சாளர் ஜேம்ஸ் என்டசன் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சவுத்ஹேம்டனில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டில் அவர் குறித்த மைல் கல்லை எட்டியுள்ளார். அதற்கமைய, 600 விக்கட்டுக்களை கைப்பற்றிய முதலாவது வேகபந்து வீச்சாளர் என்ற சாதனைக்கும் ஜேம்ஸ் என்டசன் சொந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே சூழற் பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன் 800 விக்கட்டுக்களையும், அவுஸ்ரேலியாவின் ஷென் வோன் 708 விக்கட்டுக்களையும், இந்திய அணியின் அணில் கும்லே 619 விக்கட்டுக்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளமை குறிப்படத்தக்கது.