செப்டம்பர் மாதம் 2ம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு
Related Articles
செப்டம்பர் மாதம் 2ம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பவுள்ளன. அதற்கமைய பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கான நேரம் தொடர்பில் கல்வியமைச்சு அறித்தலொன்றை விடுத்துள்ளது. 6ம் தரம் முதல் 13ம் தரம் வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை நடைபெறுமென கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8ம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படுமென கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன. அதற்கமைய பொறியியல் பீடத்தின் 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விவசாய பீடத்தின் முதலாம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ம் திகதி முதல் மீள ஆரம்பமாகவுள்ளன. அதற்கமைய விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள விவசாய பீட மாணவர்கள், எதிர்வரும் முதலாம் திகதி விடுதிகளுக்கு திரும்புமாறு கிளிநொச்சி வளாக பிரதிப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.