fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்வெட்டு தொடர்பிலான ஆய்வு அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவையில்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2020 12:45

ஊழியரொருவரின் தவறினால் நாடு முழுவதும் மின் விநியோகம் தடைப்பட்டமை தெரியவந்துள்ளது. கெரவலப்பிட்டி உபமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 17ம் திகதி நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதற்கமைய கெரவலப்பிட்டி உபமின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் தவறினால் மின்சார விநியோகம் தடைப்பட்டது. அதன் காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி செயற்பாடுகளுக்கும் தடங்கள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட குழுவினரின் அறிக்கை, இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை அமைச்சர் டளஸ் அழகபெரும இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2020 12:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க