fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச அச்சு நடவடிக்கைகள் அனைத்தும் அரசாங்க அச்சக திணைக்களத்தில் மேற்கொள்ள திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2020 11:52

வெளிநாட்டு கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான அச்சக நடவடிக்கைகள் அனைத்தையும் அரச அச்சக திணைக்களத்திற்கு ஒப்படைக்க தேவையான வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அரச அச்சக திணைக்களத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாலோசனையை விடுத்தார்.

இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் மற்றும் வேலைத்திட்டங்களை வகுக்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்தார். முத்திரை, வாக்காளர் அட்டை, வீசா ஸ்டிக்கர், போன்றன அச்சிடும் செயற்பாடுகள் அரச அச்சக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும். அமைச்சுக்கள், அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், போன்றவற்றிலுள்ள அச்சு செயற்பாடுகளின் 50 சதவீதமானவை அரச அச்சக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவேண்டுமென அமைச்சர் தெரிவித்தார். உரிய கால வட்டத்திற்குள் சரியான இலக்கை நோக்கி பயணிப்பதன் மூலம் நிறுவனமொன்றை கட்டியெழுப்ப முடியும். அவ்வாறின்றி பிரயோக ரீதியற்ற திட்டங்களினால் நிறுவனமொன்றை கட்டியெழுப்ப முடியாதென அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

1989 ம் ஆண்டு முதல் அரச அச்சக திணைக்களத்திற்கு அரச நிறுவனங்களிடமிருந்து பெறவேண்டியுள்ள நிலுவை வருமானம் 50 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறானதொரு நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாதிருக்கும் வகையில் வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 26, 2020 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க