fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2020 16:39

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நிறைவடைந்தது. எனினும் இவ்வழக்கு தொடர்பாக மேலதிக விளக்கங்களை பெற மீண்டும் ஒக்டோபர் 21 ஆம் திகதி அவர் அழைக்கப்படவேண்டியிருப்பதாக உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழு தெரிவித்தது.

சிசிரடி ஆப்ரு, விஜித் மலல்கொட, பிரீதி பத்மன்சூரிசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி இலங்கையிலுள்ள நீதியரசர்கள் மற்றும் சட்டத்தரணிகளுள் பெரும்பான்மையினர் ஊழல்வாதிகள் என ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். முன்னாள் அமைச்சர்இக்கூற்றினால் இலங்கையின் நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழப்பதாகவும் அதன் ஊடாக நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி சங்கைக்குரிய மாகல்கந்தே சுதத்த தேரர் ஓய்வு பெற்ற விமான படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டு அவரை குற்றவாளியாக தீர்ப்பளித்து தண்டனை வழங்குவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு முழு அளவிலான அதிகாரம் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்தார். ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில் தனது கட்சிக்காரர் கூறிய கருத்துக்களை இந்த வழக்கு விசாரணை செய்யும் நிலையிலும் சில இலத்திரனியல் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் மறு ஒலி, ஒளிபரப்பு செய்துவந்ததாக தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 25, 2020 16:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க