வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டினோ விடுதலை
Related Articles
வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள பிரேசிலின் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டினோவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது. போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரொனால்டினோக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்து. அதனையடுத்து, பிணை வழங்கப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற நிலையில், அரசாங்கத்தின் நிர்ணயத்தொகையை இழப்பீடாக வழங்க இணக்கம் தெரிவித்ததையடுத்து, அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.