fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் காட்டுத் தீ : 6 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2020 10:16

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக 367 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 2 இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 480 வீடுகள் முழுமையாக தீக்கரையாகியுள்ளன. ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர், இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2020 10:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க