முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து
Related Articles
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி சவுத்ஹெம்டனில் நடைபெறுகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸிற்காக 4 விக்கட்டுக்களை இழந்து 332 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஷெக் குரோலி 171 ஓட்டங்களுடனும், ஜொஸ் பட்லர் 87 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பந்துவீச்சில் யாஸீர் ஷாப் இரு விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.