fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரிக்க பாகிஸ்தான் தயாரில்லையென பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2020 09:29

பாகிஸ்தான் இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்காது என பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பலஸ்தீனர்களுக்கான, பலஸ்தீன தேசம் உருவாக்கப்படும் வரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க பாகிஸ்தான் தயாரில்லையெனவும் பிரதமர் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமிர் இராச்சியத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வாறான நிலையிலேயே இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க முடியாதென பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் தெளிவான கொள்கையுடன் உள்ளது. ஏனைய நாடுகளின் செயற்பாடுகளை அடிப்படையாக வைத்து, பாகிஸ்தானின் கொள்கைமாறாது. இஸ்ரேலுடன் எந்தநாடுகள் ஒப்பந்தங்களை செய்தபோதிலும், இஸ்ரேலை பாகிஸ்தான் தனிநாடாக அங்கீகரிக்காது என பிரதமர் இம்ரான்கான் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 22, 2020 09:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க