fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்காசியாவில் கொவிட் 19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ள நாடாக இலங்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2020 18:21

தெற்காசியாவில் கொவிட் 19 வைரஸ் பரவும் நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ள நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொடர்பில் காணப்படும் விசேட பிரச்சாரங்களை கவனத்திற்கொண்டு உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார துறை நிபுணர்கள் இலங்கையின் சுகாதார துறையை பாராட்டியுள்ளனர். 1980 ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்த உலகம் முழுவதும் சுகாதார துறை நிபுணர்கள் இலங்கையின் சுகாதார சேவைக்கு வழங்கியுள்ள பங்களிப்பு குறித்து அவதானம் செலுத்தவேண்டுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை சுமார் 100 வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது எவ்வாறு சாத்தியமானதென்பது குறித்து முழு உலக நாடுகளும் இலங்கை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளன. கொவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் போராட்டம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைந்த மட்டத்தில் பேணுவதற்கு இலங்கை ஆரம்பகட்டத்திலேயே அவதானம் செலுத்தியமை மேம்படுத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக தொற்றாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை வெற்றிகரமாக பேணுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் அவற்றின் பிரதான காரணிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறைந்த செலவில் சிறந்த சுகாதார சேவையை வெற்றிகரமாக பெற்றுக்கொள்ளக்கூடிய நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அயல்நாடான இந்தியாவில் உலகில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்றாவது நாடாக காணப்படும் நிலையில் அதற்கு அண்மையிலுள்ள இலங்கையில் கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த செயற்பாடு சிறந்த எதிர்பார்ப்பை வழங்கியுள்ளதாக சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் ஏற்பட்டிருக்காலாம் என்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில் அதன் ஊடாக சமூக மட்டத்தில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை வைரஸ் பரவல் காரணமாக தமது தாய் நாட்டிற்கு செல்லமுடியாமல் இலங்கையில் நிர்க்கதியாகியிருந்த வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையில் உயர்ந்தபட்ச கவனிப்புடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டதை பாராட்டும் வகையில் வீடியோ பதிவொன்று சமூக வலைத்தளங்களில் சஞ்சரிக்கும் நிலையில் அதுகுறித்தும் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2020 18:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க