fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செப்டம்பர் முதல் அனைத்து மாணவர்களும் சாதாரண முறையில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2020 14:57

செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலை மாணவர்களும் சாதாரண முறையில் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆலோசனைகள் அடங்கிய கடிதம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரோரா தெரிவித்துள்ளர். அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 200க்கும் அதிக மாணவர்களை கொண்ட பாடசாலைகள் தொடர்பில் விரைவில் தீர்மானம் எட்டப்படும். அதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரோரா தெரிவித்துள்ளர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 21, 2020 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க